வியாழன், 10 டிசம்பர், 2009

ஊரக சுற்றுலா வளர்ச்சி

வரலாற்று புகழ் பெற்ற செஞ்சிக் கோட்டை இன்றைய விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பழைய தென்னார்க்காடு மாவட்டத்தின் சிறப்பு பெற்ற சுற்றுலா மையமாகும். பல்வேறு அரசுத்துறைகள் தங்களுடைய துறை இலச்சினையாக வெளிக்காட்டிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பு கொண்டதாகும். இன்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுற்றுலா மையத்தை இந்தியா தொல்பொருள் ஆய்வுத் துறை பராமரித்து வருகிறது. ஆனால் இருந்தும் இன்று வரை மத்திய, மாநில அரசுகளால் சுற்றுலா மையமாக அறிவிக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. உலக அளவில் சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என்றால் , சுற்றுலா மையத்தை அடைய மூன்று வழிகள் அதாவது வான், ரயில், சாலைப் போக்குவரத்து ஆகியவை வேண்டும் என்பது தொல்பொருள் ஆய்வுத் துரையின் கருத்து. மாநில அளவிலாவது அறிவிப்பார்கள் என்றால் இன்று வரை கனவாகவே உள்ளது. ஊர்ப்புற சுற்றுலாவை மேம்படுத்தினால் மக்கள் நகரத்திற்கு இடம் பெயர்வது தடுக்கப்படும். மேலும் உள்ளூர் தொழில்கள் மேம்படுவது, நகர வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும். மேலும் இந்த செஞ்சிக் கோட்டையின் இரண்டிற்கும் இடையே ராப் கார் , படகு குழாம், சாலை ஓர பூங்கா போன்றவைகளை அமைக்கப்பட வேண்டும் என்று அவப்போது சட்ட மன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தும் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது மிகவும் வேதனை அளிக்கும் ஒன்றாகும். செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் தளமாக அறிவிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளுமா என்பதே மக்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பாகும்.

புதன், 9 டிசம்பர், 2009


வரலாற்று புகழ் பெற்ற செஞ்சிக் கோட்டை